Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குரூப் ஒன் எழுதிய மாணவர்களுக்கு முக்கிய தகவல்! நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியானது!

Important Information for Group One Written Students! Interview results published!

Important Information for Group One Written Students! Interview results published!

குரூப் ஒன் எழுதிய மாணவர்களுக்கு முக்கிய தகவல்! நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி குரூப் ஒன் முதல் நிலை தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினார்கள். இந்தத் தேர்விற்கான முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது.

மேலும் குரூப் ஒன்  தேர்வில் தேர்வானவர்கள் முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் அதில் 3800 பேர் தேர்வான நிலையில் முதன்மை தேர்வுகள் கடந்த  மார்ச் மாதம் 4, 5 ,6 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது.

மேலும் கடந்த மார்ச் மாதத்தில் நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் ஒன் முதன்மை தேர்வுக்கான இறுதி முடிவுகளை www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிட்டது.

மேலும்  முதன்மை தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வில் 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில் நேற்று டி.என்.பி.எஸ்.சி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Exit mobile version