Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை!

Important information for Kallakurichi school students! A statement released by Minister Anbil Mahesh!

Important information for Kallakurichi school students! A statement released by Minister Anbil Mahesh!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை!

கடந்த 13-ந் தேதி, விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றார்கள்.மேலும் இதை ஏற்றுக்கொள்ளாத மாணவியின் பெற்றோர், ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர்கள். மேலும் மாணவி இறந்து 4 நாட்கள் ஆகியும் உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால், கடந்த 17-ந் தேதி போராட்டம் கலவரமாக மாறியது. யாரும் எதிர்பாராத வகையில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரை தாக்கி விட்டு பள்ளிக்கூட வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

மேலும் அந்த போராட்டத்தில்ஒருசிலர் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை அடித்து நொறுக்கினர். இதில் மொத்தம் அந்த பள்ளியில் நின்ற 17 பஸ்கள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மேலும் போராட்டக்காரர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தும் அங்குள்ள மேஜை, நாற்காலிகள், கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். மேலும் போராட்டக்காரர்களின் கொடிய தாக்குதலால் அந்த பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இது குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடந்தப்பட்டு வருகிறது. மேலும்

பள்ளி வளாகத்தைமுழுவதும் பலத்த சேதமடைந்துள்ளதாலும், அங்குள்ள ஆசிரியர்கள் சிலர் மீது விசாரணை நடந்து கொண்டிருப்பதாலும் அந்த பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் நடத்த முடியாத சூல்நிலை ஏற்பட்டது. இந்த பெரிய கலவரத்தால் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ-மாணவிகளும் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், முதல்கட்டமாக அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் வகுப்புகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த வாரம் முதல்..இது குறித்து அவர் அளித்த பேட்டியில், மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் வகுப்புகள் தொடங்கும். இதற்காக வேறு இடங்கள் இறுதி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கல்வி ஆட்சியாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்களுடன் பேசியுள்ளேன்’ என்றும் அந்த அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

Exit mobile version