ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்! புதிய ரயில் சேவை தொடர்பான கோரிக்கை மனு!
பேருந்தில் ஆகும் செலவைவிட ரயிலில் செல்ல ஆகும் செலவு குறைவு என்பதால் அதிக பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகின்றார்கள். அந்த வகையில்நீண்ட காலமாக ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகள் பரிசீலிக்க வேண்டிய மனு பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மனு அளித்தார்.மேலும் அந்த மனுவில் சேலம் எஸ் ஏ விருதாச்சலம் விஆர்ஐ சேலம் எஸ் ஏ பயணிகள் ரயில் சேவைகளை கடலூர் துறைமுக சந்திப்பு வரை நீடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் சேலம் வேளாங்கண்ணி வரை பகல் நேரத்தில் தினசரி புதிய விரைவு ரயில் சேவை வழங்க வேண்டும் என்றும் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பாதைகளில் புதிய விரைவு ரயில் சேவை வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சேலத்தில் இருந்து தாம்பரத்திற்கு பகல் நேரத்தில் இன்டர்சிட்டி விரைவு ரயில் சேவை வழங்க வேண்டும் எனவும் விழுப்புரம், கடலூர், விருத்தாச்சலம் வழியாக இவை அனுப்பப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். என பல்வேறு கோரிக்கைகளை சேலம் தொகுதி மக்கள் மற்றும் தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கைகளாக விரைவில் பரிசளிக்குமாறு சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் நேற்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனுவை ஏற்று விரைவில் மேலே குறிப்பிட்டுள்ள ரயில் சேவைகள் தொடங்கப்படும் எனவும் மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.