Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்!

Important information for travelers! From now on these five airports will be served 24 hours a day!

Important information for travelers! From now on these five airports will be served 24 hours a day!

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்!

விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் மதுரை விமான நிலையத்தில் தற்போது இலங்கை, துபாய், சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவை வழங்கி வருகின்றது.இந்நிலையில் தற்போது லண்டன்,பிரான்ஸ்,ஜப்பான்,போன்ற நாடுகளுக்கு மதுரையில் இருந்து விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இரவு நேர உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை மதுரை உள்பட ஐந்து விமான நிலையங்கில் தொடங்க மத்திய விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் மதுரை,அகர்தலா,இம்பால்,போபால்,சூரத் ஆகிய ஐந்து விமான நிலையங்களில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 24 மணி நேர விமான சேவையை தொடங்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட ஐந்து விமான நிலையங்களில் விமான வான் போக்குவரத்து கட்டுப்பாடு,வலைதள தொடர்பு சேவை ஆகிய பிரிவுகளில் ஆட்கள் பணி நியமனம் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது.

விமான நிலைய பாதுகாப்பு பணியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது.மேலும் இந்த தகவலை மதுரை எம்.பி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version