கொரோனா பரவி வந்த நிலையில் அனைத்து போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் தளர்வு அளிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து மண்டலங்களுக்குள் விடப்பட்டது. ஆனால் மூன்று வாரங்களில் தொற்று அதிகரித்ததால் சேவை நிறுத்தப்பட்டது.
பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நம்பப்படுகிறது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி கூறுகையில்,
அரசு எப்போது அறிவித்தாலும், பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் என தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை தயாராக உள்ளது. அனைத்து பேருந்துகளும் பராமரிப்பு செய்து, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து தயாராக வைத்துள்ளனர் என கூறினார்.
ஜூன் மாதம் பிரிக்கப்பட்ட மண்டலங்கள் பின்வருமாறு.
மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
மண்டலம் 6 : தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி
ஜூலை 31 ஆம் தேதி ஊரடங்கு முடிய போகும் நிலையில் பேருந்துகள் இயக்கப்படும் என நம்பப்படுகிறது.