பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு!

0
130
Important information published by the Department of Education! Increase in age limit of part-time teachers!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு!

பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 2012 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பகுதி நேர பணியில் அரசு பள்ளியில் நியமனம் செய்யப்பட்டனர். சில காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில் தற்பொழுது 12 ஆயிரம் பேர் ரூ10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அரசுபள்ளிகளில் உடற்கல்வி ,ஓவியம் ,தொழிற்கல்வி பாடங்கள் ,தையல் ,இசை ,கணினி ,அறிவியல் ,தோட்டக்கலை,கட்டிடக்கலை ,வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை பகுதி நேர ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.