தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் செய்முறை தேர்வின் போது இந்த பொருளை எடுத்து செல்ல தடை இல்லை!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.
மேலும் நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நிலையில் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒன்பதாம் ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. அதற்கான வழிகாட்டுதல் வெளியாகி உள்ளது.
மேலும் இது குறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமன் வர்மா கூறியதாவது தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தேதிகளில் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களில் உடல் இயக்க குறைபாடு, பார்வை குறைபாடு, செவி திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் தேர்வுகளின் விருப்பத்தின் பேரில் செய்முறை தேர்வின் போது ஆய்வக உதவியாளர் நியமனம் செய்ய வேண்டும்.
உடல் இயக்க குறைபாடு, பார்வை குறைபாடு, செவிதிறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளித் தேர்வர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தான் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டுமே செய்முறை தேர்வுக்கு பதிலாக செய்முறை தொடர்பான கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கிய செய்முறை தேர்வு செய்யலாம்.
மேலும் செய்முறை தேர்வு நடத்தி முடிப்பதற்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இயற்பியல் பாட செய்முறை தேர்வுக்கு கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதிக்கலாம்.செய்முறை தேர்வுக்கு அரசு தேர்வு துறையால் வழங்கப்பட்ட படிவத்தில் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மதிப்பெண்களை மார்ச் மாதம் 11ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். என மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.