டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்!

0
184
Important information released by DGP Shailendrababu! Appointment of new groups for social networks!

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்!

காவல் துறை தலைமை இயக்குனர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் யூடுப் ,டுவிட்டர் ,பேஸ்புக்போன்ற சமூக ஊடகங்களில் பொய்யானத் தகவல்களை பதிவு செய்தும் ,வதந்திகளை பரப்பி அதன்மூலம் சண்டைகளையும் ,கலவரங்களையும் ,குழப்பங்களையும் ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் காவல் துறையினருக்கு உள்ளது எனவும் கூறியிருந்தார்.

மேலும் இணைய வழியில் போதைபொருட்கள் விற்பனை ,பாலியல் குற்றங்கள் ,பணமோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிபதர்க்கும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.அதனைதொடர்ந்து  37 மாவட்டங்களில் 203   அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமூக ஊடங்களில் வதந்திகள் பரப்பும் நபர்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடிக்கவும்  அவர்கள் பரப்பிய வதந்திகளை நீக்கவும் இந்த நடவடிக்கை பயன்படும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் சாதி ,மதம்,அரசியல் போன்ற மோதல்களை தடுக்கவும் இந்த குழு உதவும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.