Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று பொங்கல் பரிசு பெற முடியாது!

Important information released by the government! Can't get Pongal gift today!

Important information released by the government! Can't get Pongal gift today!

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று பொங்கல் பரிசு பெற முடியாது!

தமிழகத்தில் நேற்று முதல் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடங்கியது.தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விடுமுறையை கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருந்து மக்கள் அனைவரும் பொங்கலை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாட இருப்பதினால் மக்களின் வசதிக்கேற்ப சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்பட்டது.பொங்கல் பரிசு தொகுப்பை பெற அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரங்களில் தான் பொங்கல் பரிசு பெற மக்கள் வரவேண்டு அப்போது தான் கூட்ட நெரிசல் ஏற்படாது என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற தவறியவர்கள் பொங்கல் பரிசினை பெற கடந்த 13 ஆம் தேதி ரேஷன்கடைகளும் செயல்பட்டது.மேலும் இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளும் செயல்படும் அதற்கு பதில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் நிர்வாககாரணங்களுக்காக ஜனவரி 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Exit mobile version