அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! ரேஷன் கடைகளில் இனி இலவசமாக இந்த பொருளும் கிடைக்கும்!
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி ராஜஸ்தானில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த பேரவையின் பொழுது பதவிக் காலத்தில் முழுமையான கடைசி பட்ஜெட்டை மாநில முதல்வரும் நிதியமைச்சரும் அசோக் கெலாட் கூறுகையில் ராஜஸ்தான் முன்னாள் அரசு ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தாலாம் என முடிவு செய்யப்பட்டது.
மேலும் அந்த திட்டமானது விரிவுபடுத்தப்படுகிறது.அதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு வாரியங்கள் மற்றும் நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அந்த திட்டத்தின் மூலம் பலன் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு ரூ 3,000 கோடிக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படுகிறது. மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் நுகர்வோர்களுக்கு ரூ 500 க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும். அதுமட்டுமின்றி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் சுமார் 1 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷனுடன் மாதந்தோறும் ஒரு கிலோ தானியங்கள்,சர்க்கரை, உப்பு ஒரு லிட்டர் சமையல் எண்ணை போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கபடும் என அறிவிக்கப்பட்டது.