Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 1 தேர்வுக்கான அட்டவணை!

Important information released by TNPSC! Schedule for Group 1 Exam!

Important information released by TNPSC! Schedule for Group 1 Exam!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 1 தேர்வுக்கான அட்டவணை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டி தேர்வுகள் அனைத்தும் நடைபெறாமல் இருந்தது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்துமே மூடப்பட்ட நிலையில் அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்துமே மீண்டும் திறக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றது.சில போட்டி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதற்கான முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.மேலும் தலைமைச் செயலக பணி, உதவிப் பிரிவு அலுவலர்கள், உதவியாளர் பதவி உள்ளிட்ட குரூப் வி ஏ எழுத்து தேர்வு டிசம்பர் 18 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடுவது வழக்கம் தான்.அந்த வகையில் 2023 ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை கடந்த 15 ஆம் தேதி வெளியிட்டது.

அந்த அட்டவணையில் குரூப் 1 தேர்வுக்கான அட்டவணை இல்லை.இந்நிலையில் தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அந்தவகையில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு 2023 ல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

Exit mobile version