Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி! டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட உத்தரவு!

important-news-for-those-who-have-applied-for-permission-for-firecracker-shops-the-order-issued-by-dgp-sailendrababu

important-news-for-those-who-have-applied-for-permission-for-firecracker-shops-the-order-issued-by-dgp-sailendrababu

பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி! டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட உத்தரவு!

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக வருகின்றது.அதனையடுத்து இந்த மாதம் இறுதியில் தீபாவளி திருநாள் வரவுள்ளது அதனால் பட்டாசு வியாபாரிகள் அனைவரும் கடை வைப்பதற்காக இந்த ஆண்டில் தீயணைப்பு துறைக்கு 7,021 விண்ணப்பங்கள் வந்த நிலையில் அந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் விசாரித்த தீயணைப்பு துறையினர் பல்வேறு காரணங்களால் தகுதியில்லாத 518 விண்ணப்பங்களை நிரகாரித்து விட்டனர்.

மேலும் தற்போது வரை 5,110 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளது.இதனையடுத்து இது போன்ற பண்டிகை காலங்களில் விபத்துகளை தடுக்க தற்காலிக பட்டாசு கடைகளுக்கு கடுமையான விதிமுறைகளை அரசு அமலபடுத்தியுள்ளது. மேலும் தலைநகர் சென்னையில் மட்டும் பட்டாசு கடைகள் வைப்பதற்கு 786விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் 530,சேலம் மாவட்டத்தில் 477,கோவை மாவட்டத்தில் 445,அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 2,311, ஈரோடு மாவட்டத்தில் 210 என்ற எண்ணிக்கையில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனையடுத்து 1379 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.இந்நிலையில் தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் தீபாவளியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பட்டாசு கடைகள் வைக்க உரிமம் கேட்டு காவல் துறையிடம் வியாபாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.அவர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்து அரசு விதித்துள்ள விதி முறைகளை பற்றி விளக்கம் கொடுத்து காலம் தாமதம் ஏற்படாமல் உரிமம் வழங்க வேண்டும்.

காவல் துறையினர் காலம் தாழ்த்துவது சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிறகு அது முறைகேட்டிற்கு வழிவகுக்கும்.மேலும் காவல் கண்காணிப்பாளர்கள் ,காவல் ஆணையர் முறையான விண்ணப்பங்களுக்கு காலம் வீணாக்காமல் உரிமம் வழங்க வேண்டும்.இனிமேல் இதன் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Exit mobile version