தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 8 முதல் ஜூன் 11 வரை நடக்கவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் இரண்டுக்கான நேர்முகத் தேர்வை தள்ளிவைத்துள்ளது.
தற்போது கொரோனா பரவல்களின் நிலை அதிகமாக காணப்படுவதால், மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கொரோனா பரவலின் அச்சம் காரணமாக நேர்முகத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
இன்னும் இது போன்று உதவி பொறியாளர், உதவி மின் ஆய்வாளர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனருக்கான கலந்தாய்வு பணி நேர்முகத்தேர்வுகளும் தள்ளி வைக்கப்படுகிறது என அறிவித்துள்ளது.
மேலும் தேர்வுகளும் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன என அறிவித்துள்ளது. ஜூன் 20 முதல் 30 வரை நடக்கவிருந்த துறை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்றும், தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.