10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்!!

0
128
Important Notice for Class 10 Candidates!! Apply at District Education Office!!

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்!!

அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில்  தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதையடுத்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இந்த ஆண்டு நடைபெற உள்ளது. மேலும் பொது தேர்வு பற்றிய தகவல்களை பள்ளிகல்வித்துறை அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது 8 ஆம் வகுப்பு தனிதேர்வர்களின் பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை ஜூலை 31 ஆம் தேதி முதல் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிகல்வித்துறை தெரிவித்திருந்து.

இந்த நிலையில் 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கும், 2012 ஆம் ஆண்டு படித்து 10 ஆம் வகுப்பில் தோல்வி பெற்ற மாணவர்களுக்கும் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

10 ஆம் வகுப்பில் அறிவியியல் பாடத்தில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அறிவியியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தங்களுக்கான பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

மேலும் துணை தேர்வு இருக்கும் மாணவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 10 ஆமா தேதி முதல் 21 ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் செய்முறை பயிற்சிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.