செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு – வெளியானது அதிரடி உத்தரவு!

0
131

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. நாடு முழுவதும் 160 க்கும் மேற்பட்டோர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை 3 நபர்கள் பல்வேறு காரணங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர், மேலும் 15 பெயர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் விதிவிலக்காக கல்லூரிகள் மட்டும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யுஜிசி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது;

‘நாடு முழுவதும் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கவும் மேலும் விடைத்தாள் மதிப்பீடு வேலைகளை இம்மாத இறுதி வரை ஒத்திவைக்க பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது’ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.