Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இது இருந்தால் தான் குடமுழுக்கு விழாவில் அனுமதி!

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இது இருந்தால் தான் குடமுழுக்கு விழாவில் அனுமதி! 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்கு பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

இதன்படி குலுக்கல் முறையில் தேர்வான பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கு  அனுமதி சீட்டு  வழங்கப்படும் என்று கோவில் அறங்காவல்  துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட வரிசையில் நின்று அடையாள அட்டை காண்பித்து பக்தர்கள் நுழைவுச்சீட்டினை வாங்கி செல்கின்றனர். உடம்புக்கு விழா வருகின்ற 27ஆம் தேதி நடைபெற இருப்பதால் நாளை வரை நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என்று தெரிகிறது.

கும்பாபிஷேகம் 27ஆம் தேதி நடைபெறும் என்று அறங்காவலர் குழு அறிவித்த நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிப்பதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள போகர் சித்தர் மற்றும் புலிப்பாணி சித்தர் ஜீவசமாதிகளையும் தரிசித்து செல்வார்கள்.

புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து 2018 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் குடமுழுக்கு விழா நடத்த இயலவில்லை. இதை அடுத்து 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடமுழுக்கு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் பரவலால் இதில் தோய்வு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.

அடுத்து குடமுழுக்கு விழா உடனடியாக நடத்த வேண்டும் என்று பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கொரோனா பரவல் குறைந்ததும் கும்பாபிஷேக பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சிதிலமடைந்த தூண்கள் மற்றும் தூண்கள் சீரமைக்கப்பட்டன. குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழனி கோவிலுக்கு நேரில் சென்று கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அதன் படி ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முகூர்த்த நாள் நடப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு 26 ஆம் தேதி கும்பாபிஷேகமும் ஜனவரி 27ஆம் தேதி சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரத்தில் கோவில் ராஜகோபுரம், தங்க கோபுரத்திற்கு  புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே குடமுழுக்கு விழாவில் பங்கு பெறுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 

Exit mobile version