Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்!!

பொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்!!

 

ஏற்கனவே அறிவித்தபடி பி.டெக், பி.இ போன்ற பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கான கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி முதல் அதாவது இன்று முதல் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்கான பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 5ம் தேதி தொடங்கியது. இந்த விண்ணப்பப் பதிவானது ஜூன் மாதம் 4ம் தேதி வரை நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு மாதம் அதாவது 31 நாட்கள் இந்த விண்ணப்பப் பதிவானது நடைபெற்றது.

 

இந்த 31 நாட்களில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847 பேர் விண்ணபிக்க தகுதியான சான்றிதல்களுடன் சேர்தது தகுந்த விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தனர். இந்த 1,87,847 பேரில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் பொறியியல் படிப்பிற்கான  கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியலும் கூட கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டது.

 

தகுதி வாய்ந்த மாணவர்கள் அனைவரும் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று தொடங்கும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

 

பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கான முதல் சுற்று ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 9ம் தேதி வரையும் இரண்டாவது சுற்று ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரையிலும் மூன்றாவது சுற்று ஆகஸ்ட் 22ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

Exit mobile version