EPFO பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! நவம்பர் 30 ஆம் தேதியே கடைசி நாள்!!

0
128
Important Notice for EPFO ​​Users!! November 30th is the last day!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்பான சில விஷயங்களை நவம்பர் 30ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, EPFO பயனர்கள் மூலம் நிர்வகிக்கப்படும் இஎல்ஐ (ELI) என்கிற எம்ப்ளாய்மென்ட் லிங்க்டு இன்சென்டிவ் (Employment Linked Incentive) திட்டத்தின் பலனை பெற விரும்பும் பணியாளர்கள், 2 கட்டயாமான விஷயங்களை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு :-

✓ தங்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை (Universal Account Number – UAN), இபிஎஃப்ஓ போர்டல் வழியாக ஆக்டிவேட் (Activate) செய்ய வேண்டும்.

✓ தங்களுடைய பேங்க் அக்கவுண்ட் உடன் ஆதார் அட்டையை சீடிங் (Seeding of Aadhaar to bank account) செய்ய வேண்டும். இவ்விரு செயல்களுமே எம்ப்ளாய்மென்ட் லிங்க்டு இன்சென்டிவ் திட்டத்தின் பலன்களை பெற விரும்பும் பணியார்களுக்கான கட்டாயமான செயல்முறைகள் (Madatory Process) ஆகும்.

இந்த செயல்பாடுகள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது புதிய திட்டம் குறித்து அறிவுத்திருந்தார்.இதன்கீழ் மூன்று வகையான இஎல்ஐ திட்டங்கள் (ஏ, பி மற்றும் சி) உள்ளன. இதன்கீழ் உள்ள பலன்களாது தகுதியான எம்ப்ளாய்களுக்கு, டைரக்ட் பெனிஃபிட் டிரான்ஸ்பர் (Direct Benefit Transfer – DBT) மூலம் வழங்கப்படும்.

இதனால், நவ.30-க்குள் யுஏஎன் ஆக்டிவேஷன் மற்றும் பேங்க் அக்கவுண்ட் உடன் ஆதார் சீடிங்கை உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.