Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்!! 

ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்!!

இந்திய குடிமகனாக இருப்பதில் முக்கிய ஒரு அடையாள அட்டையாக உள்ளது. இந்த ரேஷன் கார்டு வைத்து பிறகு மத்திய அரசு மாநில அரசு கொடுக்கின்ற சலுகை கிடைக்கும் மேலும் ரேஷன் கார்டுகளை வைத்து ரேஷன் கடைகளில் பல பொருள்களை வாங்க முடியும்.

சிலருக்கு ரேஷன் கடை அருகிலும் பலருக்கு ரேஷன் கடை வெகு தொலைவிலும் இருக்கும். அதனால் அங்கு அடிக்கடி சென்று என்ன போடுகிறார்கள் என்று பார்க்க முடியாது. ஆனால் நீங்கள் வீட்டிலிருந்தபடியே ரேஷன் கடைகளில் என்ன இப்பொழுது கொடுக்கப் போகிறார்கள், ரேஷன் கடை எப்பொழுது இயங்கும், இதுவரை நீங்கள் என்ன பொருட்களை வாங்கி உள்ளீர்கள் போன்ற தகவல்களை வீட்டிலிருந்தபடியே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு நீங்கள் பண்ண வேண்டிய ஒரே விஷயம் உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போனில். TNePDS என்ற செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் நீங்கள் ரேஷன் கார்டுகளில் எந்த தொலைபேசி எண்ணை கொடுத்தீர்களோ அந்த தொலைபேசி எண்ணை கொடுத்து லாகின் செய்து கொள்ளவும். அதனால் சென்று நீங்கள் உங்களது முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் இதுவரை நீங்கள் என்னென்ன வாங்கி உள்ளீர்கள் நீங்கள் என்னென்ன வா இனி வாங்க வேண்டியது இருக்கிறது ரேஷன் கடை எந்தெந்த தேதிகளில் இயங்கும் எந்தெந்த நாட்களில் எந்தெந்த பொருட்களை தருவார்கள் போன்ற அனைத்து விவரங்களையும் அதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் பெரும்பாலும் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களுக்கு ஒரு தொலைபேசி எண் உள்ளது. 9773904050 என்ற தொலைபேசி எண்ணிற்கு PDS 101 என்ற மெசேஜை நீங்கள் அனுப்பினீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களும் அதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் ரேஷன் கடையில் என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதனை தெரிந்து கொள்ளலாம். மேலும் PDS 102 என்ற மெசேஜை செய்தால் அதன் மூலம் ரேஷன் கடை இயங்குகிறதா என்ற தகவலை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தே ரேஷன் கடையில் உள்ள விவரங்களை அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

Exit mobile version