Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த மே மாதம் அன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.இந்நிலையில் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகியது.

இதைதொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுயிருந்தனர்.இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டியிருப்பதாவது, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய விடைத்தாள் நகலை கோரி விண்ணப்பித்த மாணவர்கள் 14 ஆம் தேதி இன்று வியாழக்கிழமை முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு பக்கத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து விட்டு பின்னர் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டலுக்கு வரும் 15ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version