பொதுவாக நம் கையில் அதிக அளவு பணம் இருந்தால் அதனை நம்முடைய சேமிப்பு கணக்குகளில் பாதுகாப்பாக வைப்பது இன்றைய காலகட்டத்தில் எளிதானது மற்றும் பாதுகாப்பானதாக அமைகிறது.
வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விதிகள் உள்ளன. நிதி நிறுவனங்களுக்கு இடையே விதிகள் மாறுபடலாம். ஆனால் வங்கிகளைப் பொறுத்தவரை ஒரு சில விதிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை :-
KYC மிக முக்கியமான ஆவணமாக வங்கி தரப்பில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.வங்கியில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் டெபாசிட் செய்ய வேண்டியிருந்தாலும், வங்கி குறிப்பிட்ட சில ஆவணங்களை அளிக்க வேண்டும். இல்லையெனில் 60 சதவீதம் வரை வருமான வரி செலுத்துவது போல் அமைந்துவிடும்.
வருமான வரிச் சட்டத்தின்படி, ஒரு சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான டெபாசிட்டுகளுக்கு வருமான ஆதாரத்தை அறிவிக்க வேண்டும். அதாவது பணம் எங்கிருந்து வந்தது என்பதை சரியாக விளக்க வேண்டும்.ஆதாரத்தை குறிப்பிட முடியாவிட்டால் 60 சதவீதம் வரை வருமான வரி செலுத்த வேண்டும்.
குறிப்பாக , ஒரு நபர் நம்பகமான ஆதாரத்தைக் காட்டினால் எவ்வளவு பணத்தையும் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.நீங்கள் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டியது: 50,000 அல்லது அதற்கு மேல் ரொக்கமாக வங்கியில் டெபாசிட் செய்ய நினைத்தால் பான் கார்டு கட்டாயம்.
உங்களிடம் எத்தனை கணக்குகள் இருந்தாலும், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மட்டுமே நீங்கள் டெபாசிட் செய்ய தகுதியுடையவர். இந்த தொகைக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டால், வங்கி வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும். இங்கு வருமான ஆதாரத்தை மீண்டும் காட்ட வேண்டும். நீங்கள் வழங்கிய தகவல் திருப்திகரமாக இல்லை என்றால், நீங்கள் விசாரிக்கப்படலாம்.
ஆனால் உங்கள் பணம் அனைத்தும் வங்கிகளில் பாதுகாப்பாக உள்ளதா என்பதுதான் கேள்வி. இல்லை என்பதே உண்மை. டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) வங்கிகளில் உங்கள் டெபாசிட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. எவ்வளவு டெபாசிட் செய்தாலும் ரூ.5 லட்சம் வரை மட்டுமே காப்பீடு பெற முடியும். அதாவது வங்கி திவாலானாலும் ரூ.5 லட்சம்தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.