10 ஆம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல் குறித்து தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 இல் தொடங்கி ஏப்ரல் 08 இல் முடிவடைந்தது.தமிழகம் முழுவதும் 8,94,264 மாணவ மாணவிகள் இந்த பொதுத்தேர்வை எழுதியிருந்தனர்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து நேற்று(மே 10) காலை 9:30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியானது.8,94,264 மாணவ மாணவிகளில் 8,18,743 பேர் முழு தேர்ச்சி பெற்றிருந்தனர்.
பொத்தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: 4,22,591
பொத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை: 3,96,152
மாணவர்களின் தேர்ச்சி விகிதம்: 88.58%
பொத்தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை: 4,47,061
பொத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளின் எண்ணிக்கை: 4,22,591
மாணவிகளின் தேர்ச்சி விகிதம்: 94.53%
மாணவ,மாணவியரின் தேர்ச்சி விகிதம்: 91.55%
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி விழுக்காடு 0.16% வரை உயர்ந்திருக்கிறது.அதேபோல் கணிதத்தில் 20,691 மாணவ மாணவியர் 100 மதிப்பெண் பெற்று அசத்தியிருக்கின்றனர்.
மேலும் தேர்வெழுதிய 8,94,264 மாணவ மாணவிகளில் 75,521 பேர் தோல்வியடைந்துள்ளனர்.இவர்கள் இன்று(மே 11) முதல் துணைத்தேர்விற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதேபோல் நன்றாக தேர்வெழுதியும் மதிப்பெண் குறைந்துவிட்டது என்று கருதும் மாணவ மாணவியர் மே 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்திருக்கிறது.