பொது மக்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இந்தப் பத்து மாவட்டங்களில் மழை உஷார்!
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு மழை இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
அநேகமாக தமிழகத்தின் நிறைய பகுதிகளில் இன்று மழை பெய்யும் எனவும் இந்த நிலை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் எனவும் சென்னை வானிலை மையத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கோ அல்லது லேசான மிதமான மழைக்கோ வாய்ப்புகள் உள்ளன. என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.