Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வங்கி கணக்குகளை பயன்படுத்துவதற்கு இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Important notification issued by Reserve Bank of India for using bank accounts!!

Important notification issued by Reserve Bank of India for using bank accounts!!

வங்கி கணக்குகளை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அந்த வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை மற்றும் அதனுடைய கட்டணங்கள் குறித்த விவரங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.

இன்று பெரும்பாலான வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஏதேனும் பண பரிவர்த்தனையின் போது குறைந்திருந்தாலோ அல்லது குறைக்கப்பட்டிருந்தாலோ அதற்காக பிடிப்பு தொகை பிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இருப்பு தொகையை சரியாக வைத்துக் கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக போடப்படும் அபராதங்களில் தான் இன்று பல வங்கிகள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன. குறிப்பாக, ஒரு ஆண்டில், இந்த கட்டணங்கள் மூலம் வங்கிகள் சுமார் ₹5500 கோடி வரை சம்பாதிக்கின்றன என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகள்:
அபராத விதிப்பு :-

வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு இல்லாதபோது அபராதம் விதிக்கலாம், ஆனால் இதனால் வாடிக்கையாளரின் கணக்கில் எதிர்மறை இருப்பு (negative balance) வரக்கூடாது என RBI வலியுறுத்துகிறது.

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய குறிப்புகள் :-

1.வங்கியின் விதிமுறைகளை தெரிந்து கொள்ளுதல் :-

வங்கிகள் ஒவ்வொன்றும் விதிக்கின்ற குறைந்தபட்ச இருப்பு தொகை தாராளமாக மாறுபடுகின்றது. சில வங்கிகளில் ₹10,000 வரை இருக்க வேண்டும் என குறிப்பாக நியமிக்கப்பட்டுள்ளது.

2.அபராதத்தை தவிர்க்க நடவடிக்கைகள் ;-

குறைந்தபட்ச இருப்பு தொகையை கணக்கில் பராமரித்து வருவது மிக முக்கியம். சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு இல்லாத கணக்குகளை அடிப்படை வங்கிக் கணக்குகளாக மாற்றும் வசதியையும் அளிக்கின்றன.

குறைந்தபட்ச இருப்பு கட்டணத்தில் மாற்றம் செய்யும் பொழுது :-

வங்கியுடன் நேரடி தொடர்பில் இருந்து, விதி முறைகளைப் புரிந்து கொள்வது சிறந்தது. இவ்வாறு அடிக்கடி வங்கி விதி முறைகளைச் சரிபார்த்தால், உங்கள் கணக்கில் எப்போதும் குறைந்தபட்ச இருப்பு பாதுகாப்பாக இருக்கும் என்றும் ரிசர்வ் பேங்க் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version