ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டில் நீக்க வேண்டிய முக்கிய எண்கள்!! ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை!!

0
108
Important numbers to delete in ATM and credit card!! RBI warning!!

சைபர் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு பல வழிமுறைகளை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரிசர்வ் வங்கியானது நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தும் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து சில எண்களை நீக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது.

ஆன்லைன் மோசடிகளிலிருந்து தப்பிப்பதற்காக இந்த முக்கிய அறிவிப்பினை இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. ஏடிஎம் கார்டில் இருக்கக்கூடிய CVV நம்பரை ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டில் மறைத்து வைக்கும் படி அல்லது நீக்கிவிடும் படி அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் நாம் பயன்படுத்தக்கூடிய இந்த கார்டுகள் நேரடியாக வங்கியுடன் தொடர்புடையவை. இதன் மூலம் எளிதாக நம்முடைய வங்கி கணக்கில் உள்ள அனைத்து தொகையையும் எளிதில் எடுத்து விட முடியும்.

எனவே, இந்த கார்டில் உள்ள 3 எண்களை வேறொரு இடத்தில் பதிவு செய்து வைத்துக் கொண்டு கார்டில் உள்ள எண்களை அழித்து விடுவது நம்முடைய வங்கி கணக்கையும் அதில் உள்ள பணத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சிறந்த வழி என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது.

மேலும், ஆன்லைன் பண பரிவர்த்தனைக்காக ஓர் இடத்தில் நம்முடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் பொழுது இங்கே சேமித்து கொள்ளலாமா என்று பலமுறை அந்த பிளாட்பார்மில் கேட்கப்படும். அப்படி கேட்கப்படக்கூடிய இடங்களில் நம்முடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டை சேமித்து வைக்காமல் இருப்பது நம்முடைய வங்கி கணக்கை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவும் என்றும் ரிசா வங்கி தெரிவித்திருக்கிறது.