பள்ளிகள் திறப்பு.. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!! 

0
317
#image_title

பள்ளிகள் திறப்பு.. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!!

தமிழக பள்ளிகளுக்கு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இந்த கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் ஆறாம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பள்ளி திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன் காரணமாக கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் செயல்படவுள்ளது. இதற்காக பல முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தான் இப்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலின் படி பேருந்துகளில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்காக சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த கல்வியாண்டில் பயன்படுத்திய பயண அட்டையை இப்போது பயன்படுத்திக் கொள்ளமாறு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 10-ம் தேதி இந்த வருடத்தின் முதல் பள்ளி வேலை நாள் என்பதால் அன்று அனைத்து பேருந்துகளும் எல்லா பேருந்து நிறுத்தங்களிலும் நின்று மாணவ, மாணவிகளை ஏற்றி சரியான இடத்தில் இறக்கிவிடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க தமிழகம் முழுவதும் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை உரிய பேருந்து நிறுத்தங்களில் நின்று ஏற்றி செல்ல வேண்டும் என்றும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.