2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று துவங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் தன்னுடைய ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட உள்ளதாகவும் இந்த நிறைவு விழாவில் இக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் சினிமா துறையில் தன்னுடைய கடைசி படமான விஜய் 69 என்கின்ற படத்தை தற்பொழுது நடித்து வரும் நிலையில் அத்திரைப்படம் கூடிய விரைவில் முடிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதன் பின்பு முழுவதுமாக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாகவும் 2026 தேர்தலை நோக்கி அவர் பயணிக்கிறார் என்பது நம் அனைவரும் அறிந்ததே.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இக்காட்சி ஓராண்டு விழாவை கொண்டாட தயாராகி வருகிறது. இந்த ஓராண்டு நிறைவு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், இந்த கட்சிக்கான மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பு :-
கட்சி துவங்கி ஒரு வருட காலமாக போகும் நிலையில் இதுவரையில் தமிழக வெற்றி கழகத்திற்கு மாவட்ட வாரியாக செயலாளர்களை உறுதிப்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இதற்கான முக்கிய முடிவுகள் இந்த நிறைவு விழாவின்போது கட்சித் தலைவரால் மேற்கொள்ளப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.