Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கைலாசாவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்! நித்தியானந்தா!

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கைலாசாவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்! நித்தியானந்தா!

நித்யானந்தா கைலாச என்ற நாடு உருவாக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தா உருவாக்கிவரும் கைலாசா நாடு பற்றி பலரும் பலவிதமாக வைரலாக பேசி வருகின்றனர். அந்த நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று கைலாசாவின் தங்க நாணயங்களை அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் கைலாசாவில் வணிகம் மற்றும் உணவகம் தொடங்குவதற்கு அனுமதி அளிக்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு நித்தியானந்தா அனுமதி அளித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு வணிகம் சம்பந்தமான தொழில் தொடங்குவதற்கு கைலாசாவில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவலாகி பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.மேலும் மற்ற மாவட்டங்களில் இருப்போர்கள் அந்த மூன்று மாவட்டத்தில் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டு மீம்களை போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

 

 

Exit mobile version