ரஷ்யாவுக்கு செல்லும் பாகிஸ்தான் பிரதமர்! திட்டம் என்ன?

0
165

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த மாத இறுதியில் ரஷ்யாவிற்கு பயணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், இந்த சுற்றுப் பயணத்தின் போது அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அவர்களை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் விதமாக ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த சந்திப்பு நடைபெற்றால் கடந்த 20 வருடங்களில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ரஷ்ய அதிபர் புட்டினை நேரில் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும் என்று சொல்லப்படுகிறது. ரஷ்யா, உக்ரைன், இடையே பதற்றம் நீடித்து வருகின்ற சூழ்நிலையில், இம்ரான் கானின் இந்த அரசியல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இம்ரான்கான் உள்ளிட்ட இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.