1/2 மணி நேரத்தில் நுரையீரல் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற துத்தி இலை கசாயம் செய்து குடிங்க!
காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களால் நுரையீரலில் சளி கோர்த்துக் கொள்கிறது. இதனால் மூச்சு விடுதலில் சிரமம், தலைவலி, தலைபாரம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இதை குணமாக்க துத்தி இலையில் கசாயம் செய்து குடிங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)துத்தி இலை
2)மிளகு
3)பூண்டு
4)திப்பிலி
5)சுக்கு
செய்முறை:-
தேவையான அளவு துத்தி கீரை எடுத்து உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து இரண்டு பல் பூண்டு மற்றும் நான்கு மிளகை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி உரலில் போட்டு கொரகொரப்பான பதத்திற்கு இடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு இடித்த துத்தி கீரை, பூண்டு, மிளகை போட்டு கொதிக்க விடவும்.
அதன் பின்னர் இடித்த சுக்கு மற்றும் 2 திப்பிலி போட்டு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடித்தால் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்.