China: கிபி 1556 ஆம் ஆண்டு சீனாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது உலகில் நடக்கும் காலநிலை மாற்றத்தால் அவ்வபோது நிலநடுக்கம், நிலச்சரிவு , நிலநடுக்கம் , எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்கள் நடந்து வருகிறது. அந்த பேரழிவினால் இன்று வரை உலக அளவில் பல உயிர்கள் இறந்து போய் இருக்கிறது. இந்தியாவில் சமீப காலமாக இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன் நடந்த வயநாடு நிலச்சரிவு நாம் கண்கூட பார்த்து இருப்போம், தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மழை வெள்ளம், திருவண்ணமலையில் நிலச்சரிவு நடத்தை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளானோம். அந்த வகையில் சீனாவில் நடந்த மிகப்பெரிய இயற்கை பேரிடர் பற்றி பார்ப்போம்.
கி.பி 1556 ஆம் ஆண்டு சீனாவில் மிங் வம்சத்தின் ஜியாஜிங் பேரரசரின் ஆட்சி காலக் கட்டத்தில் நடந்த நிலநடுக்கம் தான் உலகில் நடந்த மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும். இந்த நில நடுக்கத்திற்கு ஜியாஜிங் பூகம்பம் என சீன மக்கள் கூறுகிறார்கள். இது வடமேற்கு சீனாவின் ஷான்சி மற்றும் ஷாங்க்சி மாகாணங்களில் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் வீடுகள் உயர்ந்த மலை சரிவுகள் போன்ற முற்றிலும் நிலநடுக்கத்தால் இடிந்து மண்ணோடு மண்ணாக மாறியது. இந்த பேரழிவில் மட்டும் சுமார் 8,30,000 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்று வரலாறு தகவல்கள் கிடைக்கப் பெறுகிறது. இந்த பூகம்பம் தான் உலகில் ஏற்பட்ட பூகம்பங்களை விட மிகப் பெரியது.
இந்த பூகம்பத்தினால் சீனாவின் கிழக்கு மாகாணத்தை சுனாமி தாக்கியதாக கூறப்படுகிறது. நில நடுக்கத்தை ரிக்டர் அளவு முறைப்படி அதன் அதிர்வு தன்மைகளை அளந்து வருகிறார்கள். இதுவரை உலக அளவில் பதிவான ரிக்டர் 8 என்ற அளவில் பதிவாகி இருக்கிறது. ஆனால், சீனாவில் நடந்து இருக்கும் ஜியாஜிங் பூகம்பத்தின் அளவு 8 ரிக்டர் அளவை விட அதிகமாக இருந்து இருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கின்றனர்.