Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

8 நாட்களில் ரூ. 650 கோடி வசூல் சாதனை! இந்தியாவில் மட்டும் 400 கோடியை நெருங்கும் பதான்! 

8 நாட்களில் ரூ. 650 கோடி வசூல் சாதனை! இந்தியாவில் மட்டும் 400 கோடியை நெருங்கும் பதான்! 

பல்வேறு ரெகார்டுகளை முறியடித்து ஷாருக்கானின் பதான் திரைப்படம் எட்டு நாளில் 650 கோடி வசூலை பெற்றுள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான படம் தான் பதான்.  பாடலில் தீபிகாவின் காவி நிற நீச்சல் ஆடை, ஹேஸ்டேக்,  என பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியான இந்த படம் வசூலில் ரெக்கார்டுகளை முறியடித்து வருகிறது. வெளியான ஏழு நாட்களில் உலக அளவில் 634 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. எதிர்ப்புகளையும் மீறி வெளிவந்த இந்த படம் வசூலில் சாதனை புரிந்துள்ளது.

உலகம் முழுவதிலும் ஒரு வார ஒரு வாரத்தில் ரூ 634 கோடி வசூலை அள்ளியது. இந்தியாவில் இந்தியில் 22 கோடி மற்றும் டப்பிங்கில் ஒரு கோடி என ஏழாவது நாளில் 23 கோடி வசூலை பெற்றது. இந்தியில் 318.50 கோடியும் அனைத்து டப்பிங் வெர்ஷனில் 11.75 கோடி வசூலை பெற்று இந்திய அளவில் 330.25 கோடியாக வசூல் உயர்ந்துள்ளது.

இரண்டாவது வார தொடக்கத்திலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் பதான் எட்டாவது நாளில் ரூ.19.50 கோடி வசூலை பெற்றுள்ளது.

தங்கல்: ரூ.374.53 கோடி, டைகர் ஜிந்தா ஹை: ரூ 339 கோடி,  பிகே: ரூ 337.72 கோடி, பஜ்ரங்கி பைஜான்: ரூ 315.49 கோடி சுல்தான்: ரூ 300.67 கோடி, ஆகிய அதிக வசூல் செய்த இந்தி படங்களின் சாதனையை பதான் பின்னுக்கு தள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version