CINEMA:திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு வில்லியாக நடித்த வடிவுக்கரசி, ரஜினி ரசிகர்கள் தனக்கு நேர்ந்த சுவாரஸிய நிகழ்வை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எதிர்மறை கதாப்பாத்திரத்திற்கு பெயர் போனவர் தான் நடிகை வடிவுக்கரசி. 1978 ஆம் ஆண்டு வெளியான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அறிமுகமானார் .அதன் பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கி ,ரஜினி வரை பல முன்னணி நடிகர்களுக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர்.
நடிகை வடிவுக்கரசி ரஜினி ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட சுவாரஸிய நிகழ்வை பேட்டி ஒன்றில் பகிர்ந்தார். அதில் கடந்த 1997 ஆம் ஆண்டு அருணாச்சலம் படம் சுந்தர் சி இயக்கத்தில் வெளியானது, இப் படத்தில் ரஜினிக்கு வில்லியாக பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தேன் நான்.
அந்த படம் மிக சிறப்பாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது நானும் என் அம்மாவும் திண்டுக்கல்லில் கொடைக்கானல் செல்ல ரயில் ஏறினோம், அப்போது டி.டி.ஆர் வந்து என்னிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றார் , மேலும் ரஜினி ரசிகர்கள் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றதும். நான் ஒன்றும் செய்யவில்லை என்று கூறினேன்.
அப்போது ரஜினியை பார்த்து அனாதை பயலே என்று கூறியுள்ளீர்கள் என ரஜினி ரசிகர் கேட்ட நான் வசனம் தான் சொன்னேன் எனக் கூறினேன். ஆனாலும் என் விளக்கத்தை ரஜினி ராசிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு நான் மன்னிப்பு கேட்டதாக வடிவுக்கரசி பேட்டியில் தெரிவித்துள்ளார்.