விபத்து நடந்தால் இதன் மூலம் ரூ 1 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா!!

0
296
In case of an accident you can get Rs 1 lakh through this.. Do you know how!!

விபத்து நடந்தால் இதன் மூலம் ரூ 1 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா!!

இந்தியாவில் இருக்கின்ற கிராமங்களில் எளிதில் வங்கி சேவை வழங்கும் விதமாக அஞ்சல் துறை சார்பில் “இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க்(IPPB)” என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது.இந்த திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டிவிட்ட நிலையில் இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க் பொது காப்பீட்டு நிறுவனத்துடன் சேர்ந்து ஆண்டுக்கு ரூ.355,ரூ.555 மற்றும் ரூ.755 பிரீமியத்தில் ஹெல்த் பிளஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஹெல்த் பிளஸ் ஆகிய இரண்டு விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த காப்பீட்டு திட்டத்திற்கான காலம் ஒரு வருடம் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஹெல்த் பிளஸ் காப்பீட்டு திட்டம்

18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் இந்த காப்பீட்ற்கு தகுதியானவர்கள் ஆவர்.பிரீமியம் ரூ.355 என்ற ஹெல்த் பிளஸ் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டவர்களுக்கு விபத்தால் உயிரிழப்பு அல்லது ஊனம் ஏற்படுவது போன்றவற்றிற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.சம்மந்தப்பட்டவரின் குழந்தைகள் திருமணத்திற்கு ரூ.50,000 வரை வழங்கப்படும்.அதேபோல் விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை வழங்கப்படும்.

மேலும் வருடாந்திர பிரீமியம் ரூ.555க்கான ஹெல்த் பிளஸ் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டவர்களுக்கு விபத்தால் உயிரிழப்பு அல்லது ஊனம் ஏற்படுவது போன்றவற்றிற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.சம்மந்தப்பட்டவரின் குழந்தைகள் திருமணத்திற்கு ரூ.50,000 வரை வழங்கப்படும்.அதேபோல் விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை வழங்கப்படும்.இறுதி சடங்கு செலவுகளுக்கு ரூ.5,000 வரை கோர முடியும்.

மேலும் வருடாந்திர பிரீமியம் ரூ.755க்கான எக்ஸ்பிரஸ் ஹெல்த் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டவர்களுக்கு விபத்தால் உயிரிழப்பு அல்லது ஊனம் ஏற்படுவது போன்றவற்றிற்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும்.சம்மந்தப்பட்டவரின் குழந்தைகள் திருமணத்திற்கு ரூ.1,00,000 வரை வழங்கப்படும்.அதேபோல் விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை வழங்கப்படும்.எக்ஸ்பிரஸ் ஹெல்த் திட்டத்தின் கீழ் வருடாந்திர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பிற நன்மைகளையும் பெற முடியும்.