கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!!

0
243
#image_title

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட காராடி பகுதியைச் சேர்ந்தவர் விஜூ. இவரும் இவரது மனைவி டின்டுவும் கஞ்சிக்குழி பகுதியில் சிறிய அளவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தனர். ஹோட்டலில் போதிய வியாபாரம் நடைபெறாத நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி பொருளாதார நெருக்கடியில் சிக்கினர். இதனால் கடனை திருப்பி செலுத்த இயலாத நிலை ஏற்பட்டபோது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் இன்று விஜூ, டின்டு மற்றும் ஒரு மகள் இரண்டு மகன்கள் என ஐந்து பேரும் திடீரென விஷம் குடித்தனர். பின்னர் விஜுவின் மூத்த மகள் அண்டை வீட்டில் ஓடி சென்று சம்பவம் குறித்து கூறியதை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்தோர் விரைந்து சென்று ஐந்து பேரையும் இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கணவனும் மனைவியும் உயிரிழந்த நிலையில் 11 வயது மூத்த மகள் எட்டு மற்றும் இரண்டு வயது கொண்ட இரண்டு மகன்கள் மூவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியினர், விரைந்து சென்று பிள்ளைகளுக்கு உப்பு நீர் கொடுத்து வாந்தி எடுக்க வைத்ததால் தான் பிள்ளைகள் மூவரும் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
கடன் தொல்லை காரணமாக குடும்பமே தற்கொலை முயற்சி மேற்கொண்டு தம்பதியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.