Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர் முழக்க பட்டினி போராட்டம்!!

#image_title

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர் முழக்க பட்டினி போராட்டம்!!

கிருட்டிணகிரி மாவட்டம்
உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஊராட்சிகளில் சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக்கோரி ஒன்றிய-தமிழக
அரசுகளை கண்டித்து உத்தனப்பள்ளியில்
88 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அவ்வாறு ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக
நாம் தமிழர் கட்சியினர்
கிருட்டிணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில்
கிருட்டிணகிரி மாவட்ட
உழவர் பாசறை சார்பாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் உழவர் பாசறை மாவட்ட செயலாளர் வேல்கணேசன் முன்னிலையில்
தொடர் முழக்க பட்டினி போராட்டம் நடைப்பெற்றது.

இந்த பட்டினி போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version