ஒரே நாளில் சளி அனைத்தும் அடியோடு வெளியேறும்!! இதை மட்டும் சாப்பிடுங்கள்!!
மழை காலங்கள் தொடங்கும் நிலையில் அனைவரும் சளித் தொலையில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். சளி வந்துவிட்டால் இந்த பதிவில் சொல்லபட்டிருக்கும் இரண்டு உணவு பொருட்களை சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள சளி உடனடியாக வெளியேறிவிடும்.
வைரஸ் என்பது நமது நுரையீரலைத்தான் முதலில் பாதிக்கும். இதானால் சளி இருமல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றது. ஒரு சிலருக்கு சளி வந்துவிட்டால் வேகமாக குணமடைந்து விடும். ஒரு சிலருக்கு சளி அவ்வளவு எளிதாக குணமடையாது.
ஒரு சிலருக்கு சளியானது நுரையீரலில் தங்கி மூக்கடைப்பு, மூச்சுத் திணறல், அடுக்குத் தும்மல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த சளி நுரையீரலில் நீண்ட நாட்கள் இருந்தால் அது ஆஸ்துமா, சைனஸ் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சளி பிடித்தது என்று மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் பொழுது சளியானது வெளியேறாமல் உடலில் தங்கி விடுகிறது. இது மேலும் உற்பத்தியாகி இரண்டு மடங்காக வெளியேறும். மருந்து மாத்திரைகளை எடுக்காமல் இயற்கை வைத்திய முறையில் நுரையீரலில் தங்கி இருக்கும் சளியை எவ்வாறு வெளியேற்றுவது என்று பார்க்கலாம்.
பருவகால மாற்றங்களால் சிலருக்கு சளி பிடிக்கும். மேலும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு விரைவாக சளி பிடிக்கின்றது. இந்த பதிவில் சொல்லப்படும் மருந்தை சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.
முன்னதாக கூறியது போல எந்த வைரஸாக இருந்தாலும் அது நுரையீரலைத் தான் முதலில் பாதிக்கும். அவ்வாறு நுரையீரல் பாதிக்கும் முன்பு தொண்டை வலி, தொண்டை எரிச்சல், தொண்டை புண், தொண்டை சளி போன்ற பிரச்சனைகள் வரும். அந்த சமயம் இந்த மருந்தை தயார் செய்து பயன்படுத்தினால் நுரையீரல் பாதிக்கப்படுவதை தடுக்கலாம். மேலும் நுரையீரலில் தங்கி இருக்கும் சளியை உடனடியாக வெளியேற்றலாம்.
தேவையான பொருள்கள்…
* கற்பூரவல்லி இலை
* சின்ன வெங்காயம்
தயார் செய்யும் முறை…
ஒரு கற்பூரவல்லி இலையை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கோள்ள வேண்டும். ஒரு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
எடுத்து வைத்துள்ள கற்பூரவல்லி இலையில் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை வைத்து அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.
இந்த ரெண்டு பொருளையும் பச்சையாக ஒன்றாக சாப்பிடும் பொழுது இதன் பலன்கள் மிக விரைவாக கிடைக்கும். இந்த மருந்தை சாப்பிட்ட 5 நிமிடங்களில் சளி வெளியேறத் தொடங்கும்.
இந்த மருந்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அது போல இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு இதை சாப்பிடலாம். அவ்வாறு இல்லை என்றால் மாலையில் சாப்பிடலாம்.
இந்த மருந்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…
* இந்த இரண்டு பொருள்களையும் நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மூச்சு திணறல், மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சனை அனைத்தும் சரியாகும். இரவில் ஆழ்ந்த தூக்கம் வரும்.
* இந்த மருந்தை தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய் அடைப்பு சரியாகும். மேலும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
* இரவு நேரங்களில் இந்த மருந்தை சாப்பிடும் பொழுது மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.
* இதை சாப்பிடுவதால் பற்களுக்கு பலத்தை கொடுக்கும். வாய் துர்நாற்றம் இருக்காது.
* இந்த மருந்தை சாப்பிடும் பொழுது உடல் முழுவதும் சுத்தம் அடைகின்றது.
* இதை சாப்பிடும் பொழுது தொப்பை, ஊளைச் சதை குறையத் தொடங்கும்.
* சைனஸ், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இந்த மருந்தை சாப்பிட்டு வந்தால் 100 சதவீதம் முழுமையாக சைனஸ் மற்றும் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து குணம் பெறலாம்.
* சிறிய குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இந்த இரண்டு பொருள்களையும் ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் பாதியாக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இந்த தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
சளி, மூக்கடைப்பு, மூச்சு திணறல், ஆஸ்துமா, சைனஸ், இருமல், வறட்டு இருமல் போன்ற நுரையீரல் பிரச்சனைகளை இந்த மருந்து சரி செய்யும்.