நடிகர் விஜய்யை சந்தித்த சிறுத்தை சிவா படம் தொடர்பாக அப்போது?

0
183
In relation to the film Siruthai Shiva met actor Vijay then?

2008-ஆம் ஆண்டு செளர்யம் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக இயக்குனராக இந்திய சினிமா துறையில் அறிமுகமானவர் சிவா. இவர் தமிழ் சினிமாவில் முதல் படமாக சிறுத்தை இயக்கினார்.

இந்த படம் தமிழ் சினிமா துறையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் அவருக்கு சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டனார். மேலும் அவர் 9 படங்களை இயகியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இவர் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், ஒளிபதிவாளர், என பல திறமை கொண்டவராக சினிமா துறையில் இருக்கிறார்.

இவரின் 10வது படமாக சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளர்.இந்த படத்தின் ரிலீஸிற்கு நெருங்கி வரும் நிலையில் படக்குழு புரொமோஷன் வேலைகளை முழு வீச்சில் செய்து வருகின்றனர். இப்படம் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அப்போது ஒரு பேட்டியில் சிறுத்தை சிவா, விஜய் பற்றியும் கதை கூறியது குறித்தும் பேசியுள்ளார்.

அதில் அவர், நான் பலமுறை விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறேன், படம் எடுப்பதற்கு கதையையும் கூறியிருக்கிறேன். ஆனால் சரியான காலம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளார்.