சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! 

0
160
#image_title

சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!!

சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் மற்றும் அவரது இரண்டு மகள்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.பாதுகாப்பு பணியிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து காவல்துறையின விசாரணையில் பொன்னம்மாளுக்கு சொந்தமான ஒன்றை ஏக்கர் நிலம் இரண்டு மகளுக்கு பிரித்து தரவேண்டும் என இருந்த நிலையில் மகன் லோகநாதன் நிலத்தை அபகரித்துக் கொண்டு தர மறுப்பதாக குற்றம்சாட்டினார். மாவட்ட நிர்வாகம் எனது மகன் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இதேபோல் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிசந்திரன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அவரிடம் நடத்திய விசாரணையில்,பெரியபுத்தூர் பகுதியில் ஹரிச்சந்திரனுக்கு சொந்தமான வீட்டை பாதாள சாக்கடை திட்டத்திற்காக  இடித்துள்ளதாகவும்,இது குறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் அளித்த நிலையில் புகார் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வம் அவரது மகன் செந்தில் மற்றும் உறவினர்கள் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார் .