சேலத்தில் மழைநீர் வீட்டுக்கு புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி!.. அதிகாரியின் உறுதி நிறைவேறுமா?..

0
127

சேலத்தில் மழைநீர் வீட்டுக்கு புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி!.. அதிகாரியின் உறுதி நிறைவேறுமா?..

கடந்த சில மாதங்களாக விடாது பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று சேலத்தில் இரவு கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த மழை நீரினால் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சேலம் சன்னியாசிகுண்டு, அண்ணா நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை மக்களே டப்பாவை பயன்படுத்தி  ஊற்றி வருகின்றனர். எனினும் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதிகாரியிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர். இதனால் அவர்களின் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மழை நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டு வந்தது. இந்த போராட்டத்தை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். உங்கள் வீட்டில் அருகில் உள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்றப்படும் என அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.

அதன்படி பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலில் காரணமாக போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.