Switzerland: சுவிட்சர்லாந்து நாட்டின் பொது வெளியில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந். இந்த நாடு உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொது வெளியில் முகத்தை மறைக்கக் கூடிய ஆடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சட்டம் நிறைவேற்ற அந்த நாட்டு மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் முகத்தை மறைக்கும் ஆடை அணிய தடை வேண்டி 51% மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். பெரும்பான்மையான மக்கள் முகத்தை மறைக்கும் ஆடைக்கு தடைக்கு ஆதரவாக வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். எனவே நடந்த நவம்பர் மாதம் இச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் 2025 ஜனவரி-1 ஆம் தேதி முதல் அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிபவர்களுக்கு அபராதமாக 100 பிரான்சிஸ் தொகை விதிக்கப்படும். இந்திய மதிப்பு படி 100 பிரான்சில் என்பது ரூ.10,000 ஆகும். மேலும், அபராத தொகையை உடனடியாக செலுத்தாதவர்களுக்கு 1000 பிரான்சிஸ் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. அதாவது, 1000 பிரான்சிஸ் என்பது இந்தியா ரூபாய் மதிப்பு படி ஒரு லட்சம் ரூபாய் ஆகும்.
இந்த சட்டம் மத நம்பிக்கை வழிபாட்டு தளங்கள் மற்றும் விமானங்கள், தூதரகங்கள் போன்ற பகுதிகளில் பொருந்தாது. மேலும், சுகாதாரம் ரீதியாக முகத்தை மறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் இச் சட்டம் அதற்கு பொருந்தாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பொது மக்களின் ஆடை சுதந்திரத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பல நாடுகள் இச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.