Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை நம்பவே நம்பாதிங்க! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று அதிகரித்துக்கொண்டே சென்ற சூழ்நிலைகளில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நடைபெறவில்லை.

ஆகவே இந்த 2 ஆண்டு காலமாக பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியிலிருந்து வந்தார்கள்.

இந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த வருடத்திற்கான தேர்வுகள் அனைத்தும் நேரடியாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை மிக உறுதியாக தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பரவி வரும் தகவல் தவறானது எனவும், 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து கட்டாயமாக ஆண்டு இறுதிக்கட்ட தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதோடு 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

9ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று செய்தி வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை இதற்கு விளக்கமளித்திருக்கிறது.

Exit mobile version