தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு :மத்திய அரசு உத்தரவு

0
106

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கி, தற்போது வரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் 5,880 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 2,85,024 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருபக்கமிருக்க ,நோய் தாக்கி பூரண குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 6,448 பேராக உள்ளன.இதுவரை பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,27,575 பேராக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 119 பேர் பலியாகியுள்ளனர்.இதனால் இதுவரை கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,690 பேராக உள்ளது.

நேற்று அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு உறுதியான மாவட்டமாக சென்னை கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 984 பேர் ஆகும். மொத்த பாதிப்பாக சென்னையில் மட்டுமே 1,07, 109 பேர் உள்ளதாக கூறுகின்றனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.மேலும் தென் மாவட்டங்களான மதுரை ,தேனி, திண்டுக்கல் ,தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் உள்ள பாதிப்பு முன்பை விட அதிகமாகவே காணப்படுகின்றது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு வழிமுறைகளில் தீவிரமாக கடைபிடிக்க 4 மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது .அதில் தமிழகமும் ஒன்று.

1.குஜராதில் அகமதாபாத், சூரத், பெலகவி.
2.கர்நாடகாவில்-பெங்களூரு, கல்புரகி, உடுப்பி.
3.தெலங்கானாவில்- ஹைதராபாத், மெட்சல்-மல்காஜ்கிரி
4.தமிழகத்தில்- சென்னை, காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை, திருவள்ளூர், ,திருச்சி,தேனி தூத்துக்குடி, விருதுநகர்.

இந்த நான்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக ஊரடங்கு கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.