Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தஞ்சாவூர் மாவட்டத்தில் நில தகராறில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு! பரபரப்பில் அப்பகுதி!

In Thanjavur district, a woman was cut with a sickle in a land dispute! The area is busy!

In Thanjavur district, a woman was cut with a sickle in a land dispute! The area is busy!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நில தகராறில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு! பரபரப்பில் அப்பகுதி!

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கொளுத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது  மனைவி இளையநில. விவசாய தொழில் செய்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் இளையநிலாவின் உறவினர் இளங்கோவன்.

அவர் மினி பஸ் கண்டக்டர்ஆக வேலை பார்த்து வருகின்றார். இவர்களுக்கு இடையே அவ்வப்போது நிலபிரச்சனை  வந்து செல்லும். அதேபோல்   இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இளங்கோவன் இளையநில விடம் தகராரில் ஈடுபட்டார்.

மேலும் வாக்குவாதத்தில் ஆரம்பித்த இந்த தகராறுனது பிறகு கைகலப்பாக மாறியது. மேலும் தகராறு செய்ததோடு அவரை திட்டி கைகளால் தாக்கி மறைத்து வைத்திருந்தார் அறிவாளால் இளையநிலாவின் இடது கையில் வெட்டியுள்ளார். இளையநிலா அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இளையநிலா சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். இளங்கோவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version