Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண்ணிமைக்கும் நேரத்தில் மகன் கண்முன்னே   40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து தந்தை பலி !..

In the blink of an eye, the father fell from a height of 40 feet in front of his son!

In the blink of an eye, the father fell from a height of 40 feet in front of his son!

கண்ணிமைக்கும் நேரத்தில் மகன் கண்முன்னே   40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து தந்தை பலி !..

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராமு. இவருடைய வயது 51. இவர் மங்கலத்தையடுத்த இச்சிப்பட்டி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.இங்கு பலர்  வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தொழிலாளியாக பல ஆண்டுகளாக ராமு பணியாற்றி வருகிறார். இந்த கல்குவாரியில் ராமுவின் மகன் பாலுவும் வேலை செய்து வந்திருந்தார். இந்நிலையில் நேற்று கல்குவாரியில் ராமுவும் அவருடைய மகன் பாலுவும் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ராமு 40 அடி உயரத்தில் இருந்து தவறி கல்குவாரிக்குள் விழுந்துள்ளார்.இந்த கல்குவாரிக்குள் தண்ணீர் இல்லாததால் ராமு பலத்த காயம் அடைந்தார்.மேலும் இந்த காயத்தால் ரத்தம் வெளிவர தொடங்கியது.

உடனே அருகில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சேர்த்த அவரை மருத்துவர்கள் பரிசோதித்து ராமு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி. இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வந்தது.

Exit mobile version