நடுவழியில் அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி! பரபரப்பாக அளிக்கப்பட்டுவரும் தீவீர சிகிச்சை!!
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று புதுக்கோட்டையிலிருந்து சென்னை புறப்பட்டுள்ளார். இவர் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு நேரத்தில் பயணம் செய்து உள்ளார். அவ்வாறு வந்தவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவருடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது என கூறினர்.
காலை நேரம் வரை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.மேல் சிகிச்சைக்காக அமைச்சர் மெய்யநான் சென்னை வர உள்ளார்.தனி வாகனம் மூலம் சென்னைக்கு அழைத்து வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திடீரென்று பயணம் செய்யும்போது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக அமைச்சர்கள் அவரின் உடல் நலத்தை குறித்து விசாரித்து வருவதாகவும் கூறுகின்றனர்.