பங்கு சந்தையில் இன்று!! ஏசியன் பெயிண்ட்ஸ்,எச்டிஎப்சி,டெக் மஹிந்திரா டாப் கெய்னர்ஸ்!!
இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிப்டி 50 இன்று கிட்டத்தட்ட அரை சதவிகிதம் அதிகமாக வர்த்தகம் செய்ய தொடங்கியது. மும்பை பங்கு சந்தை குறியீடான பிஎஸ்இ சென்செக்ஸ் 53,150 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 50 குறியீடு 15,950 புள்ளிகளை தாண்டியது.
அதிக லாபம் ஈட்டியவர்கள் (Top Gainers): சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், வீட்டு மேம்பாட்டு நிதி நிறுவனம் (எச்டிஎப்சி), டைட்டன் நிறுவனம், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை சென்செக்ஸ் லாபத்தில் முதலிடத்தில் உள்ளன.
அதிக இழப்பை சந்தித்தவர்கள் (Top Losers): பஜாஜ்-ஆட்டோ, டாடா ஸ்டீல், எச்சிஎல் டெக், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் இழப்பில் முதலிடத்தில் உள்ளன.
ஒபெனிங் பெல்: பிஎஸ்இ சென்செக்ஸ் 180 புள்ளிகள் என 0.4 சதவீதம் உயர்ந்து 53,156 ஆக உள்ளது. நிஃப்டி 50 குறியீடானது 15,950 அளவைத் தாண்டியது. நிஃப்டி மீடியா மற்றும் நிஃப்டி மெட்டல் குறியீடுகள் தவிர, அனைத்து துறை குறியீடுகளும் பச்சை நிறத்தில் வர்த்தகம் செய்தன. எஃப்.எம்.சி.ஜி 0.6 சதவீதமும், ஐடி குறியீடு 0.5 சதவீதமும் உயர்ந்தது.