பங்கு சந்தையில் இன்று!! வர்த்தகம் லாபத்துடன் தொடங்கம்!! VIX 1%உயர்வு!!
இந்திய பங்குச் சந்தையில் குறியீடுகள் இன்று வர்த்தகத்தை லாபத்துடன் தொடங்கின. மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் தொடக்க மணியில் 52,900 புள்ளிகளை தாண்டியது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 15,850 புள்ளிகளுக்கும் மேல் இருந்தது. இரண்டு குறியீடுகளும் 0.65% உயர்வில் இருந்தது. இந்தியாவின் வங்கி நிஃப்டி 34,800 புள்ளிகளுக்கும் மேல் 0.66% பெற்றுள்ளது. பரந்த சந்தைகள் முக்கிய குறியீடுகளை போலவே வர்த்தகத்தை தொடங்கியது. இந்தியா VIX 1%உயர்ந்தது.
சென்செக்ஸில் ஆக்சிஸ் வங்கி, டைட்டன், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் மாருதி சுசுகி இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபத்தில் முதலிடம் (top gainers) பெற்றன . இந்த நிறுவனங்கள் அனைத்தும் தலா 1% க்கும் மேல் லாபம் பெற்றுள்ளன. டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டி மற்றும் என்டிபிசி ஆகியவை மிக மோசமான சரிவில் ( top losers) உள்ளன.
இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தை தலால் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஐபிஓ சந்தா தொடர்கிறது. இந்த வாரம் சந்தாவுக்காக நான்கு புதிய சலுகைகள் திறக்கப்படுகின்றன. விண்ட்லாஸ் பயோடெக், க்ர்ஷ்னா டயக்னாஸ்டிக்ஸ், எக்ஸாரோ டைல்ஸ் மற்றும் தேவயானி இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 4-ம் தேதி தனது ஐபிஓக்களை சந்தாவிற்காக திறக்கும்.