Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கரும்பு தோட்டத்தில் கண்டம் துண்டமாக கிடந்த 14 வயது சிறுமி!

கரும்பு தோட்டத்தில் கண்டம் துண்டமாக கிடந்த 14 வயது சிறுமி!

உத்திரபிரதேசத்தில் 14 வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து அந்த சிறுமியை கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டு விட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும், லக்னோ அருகே உள்ள லகிம்பூர் கெரி என்ற மாவட்டத்தில் இருக்கும் 14 வயது சிறுமிக்கு தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.

சம்பவத்தன்று சிறுமி அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.அப்பொழுது அங்கே வந்த 3 பேர் அந்த சிறுமியை தூக்கிச் சென்று பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளனர்.

அத்துடன் விடாமல் அந்த சிறுமியின் கண்ணை நோண்டி, நாக்கை அறுத்து, உடலை கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டுவிட்டு, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
சிறுமியை காணாது தேடிய பெற்றோர்கள் கரும்பு தோட்டத்திற்கு சென்று பார்க்கும் பொழுது கண்டம் துண்டமாக வெட்டப்பட்ட உடலை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து ஓவென கதறி அழுது இருக்கின்றனர்.

மேலும் இதுகுறித்து ஊர் மக்களுக்கு விஷயம் தெரிய வந்த நிலையில் ஊர் மக்கள் அனைவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் அந்த மர்ம நபர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மூவரில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவன் மறைமுகம் ஆகியுள்ளதால் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு என்னதான் காரணம்? யார் தான் இதற்கு முடிவு எடுப்பார்கள்?.
பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

Exit mobile version