Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமைச்சரை சுற்றி வளைத்து சரமாரியாக கேள்வி கேட்ட கிராம மக்கள்!

#image_title

அமைச்சரை சுற்றி வளைத்து சரமாரியாக கேள்வி கேட்ட கிராம மக்கள்!

வருணா தொகுதியில் கர்நாடக அமைச்சர் சோமண்ணாவை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கிராம மக்கள் கேள்வி கேட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாங்கள் இந்த மாவட்டத்தின் பொருப்பு அமைச்சராக இருந்த போது இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள். வருணா தொகுதியில் கர்நாடக அமைச்சர் சோமண்ணாவை அவர் தொகுதியை சேர்ந்த கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக வீட்டு வசதி துறை அமைச்சர் சோமண்ணா வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல் தொகுதியாக அவரது கோவிந்தராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் இரண்டாவது தொகுதியாக சித்திராமையாவை எதிர்த்து வருணா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

நேற்று வருணா தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று அவர் வருணா தொகுதியில் பல கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.‌ அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது சில கிராம மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு தாங்கள் இந்த மைசூரு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்த போது ஏன் இந்த தொகுதிக்கு எந்த வளர்ச்சி பணியும் செய்யவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதனால் அவரது பிரச்சாரம் தடைபட்டது. மக்கள் கேள்விக்கு பாஜக அமைச்சர் பதில் அளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த நிலையில் அவருடன் இருந்த மைசூரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா அருகில் இருந்தவர்களை இது குறித்து வீடியோ எடுக்க வேண்டாம் என தடுத்து நிறுத்தினார்.

Exit mobile version